சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழகறிஞர் கிருஷ்ணனுடன் நெல்சன் மனைவி மோனிஷா பணப்பரிவர்த்தனை செய்ததாக வெளியான தகவலுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது தனக்கும் தனது கணவரான இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் செயல். தொடர்ந்து தவறான தகவல் பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.