டெல்லி: மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்.பிக்களின் கோரிக்கைக்கு ஆதாரமற்ற விஷயங்களை கொண்டு வந்து இடையூறு செய்வதாக பாஜக எம்.பி. திலீப் கோஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிட நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மணிப்பூர் கொடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யபடதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுரை 4 பேர் கைது செய்யபட்டதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இது குறித்து பிரதமர் மோடி பேசவேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக நாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2வது நாளாக முடங்கியது.
இந்நிலையில், ஒவ்வொரு முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதும், ஆதாரமற்ற விஷயங்களை கொண்டு வந்து இடையூறு செய்வதேயே எதிர்க்கட்சியினர் வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என பாஜக எம்.பி. திலீப் கோஷ் கருத்து தெரிவித்துள்ளார்.