செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், அகற்றப்படாத தடுப்புகளால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக இருந்து வருகிறது. செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இதுபோல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையத்தை நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நோயை கட்டுப்படுகள் விதிக்கப்பட்டன.
அதில் ஒன்றான செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் போலீசார் பேரிகார்டுகளை வரிசையாக வைத்து தடுப்புகள் அமைத்தனர். ஆனால், 3 ஆண்டுகளை கடந்தும் தற்போதும் தடுப்பு அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்களில் ரயில் நிலையம் வருபவர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர அவசரமாக ரயிலை பிடிக்க வருபவர்கள் தடுப்பு காரணமாக ரயிலை தவறவிட்டு தவிக்கின்றனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, 3 ஆண்டுக்கு முன்பு செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் போடப்பட்ட தடுப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.