தேவையானவை:
வேகவைத்த பார்லி – 100 கிராம்,
வறுத்து பொடித்த ஓட்ஸ் – 100 கிராம்,
கீரை – 1 கட்டு (ஏதோ ஒரு கீரை),
வெங்காயம் – 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 6,
உப்பு – சுவைக்கு,
எண்ணெய் 200 கிராம்.
செய்முறை:
பார்லியை ஊறவைத்து வேகவைக்கவும். பின்பு அதில் உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதில் வறுத்த ஓட்ஸ் கரகரப்பாக பொடித்து அத்துடன் வெங்காயம், வதக்கிய பச்சைமிளகாய், கீரை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி அந்த கலவையை பார்லி, ஓட்ஸுடன் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு சிறு தேவையான வடிவங்களில் தட்டி தவாவில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சுவையான பார்லி ஓட்ஸ் கீரை கட்லெட் ரெடி.