கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சிவராமன், கைதுக்கு முன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிரிழந்தார். வழக்கில் தேடப்பட்டு வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுதாகர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கமல் ஆகியோர் கைது செய்தனர்.