விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணாடித் துண்டு கிடந்த பார்பிக்யூ சிக்கனை சாப்பிட்டவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிக்கனுக்குள் கிடந்த கண்ணாடித்துண்டு குத்தியதில் முகமது பாரித் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சமையலறையில் இருந்த கண்ணாடி பாட்டிலின் துண்டு மசாலாவில் கலந்திருக்கலாம் என கடை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.