மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்த செஸ்டின்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையருகே உள்ள பாரில் மது அருந்த சென்றேன். பாரில் சிக்கன், முட்டை உள்ளிட்ட உணவுப்பொருளை சாப்பிட ஆர்டர் செய்தேன். அங்கு சிக்கன், முட்டை சரியில்லை. எனவே அந்த பாருக்கு உணவுப்பொருள் விற்க தடை விதிக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியகவுரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உணவுப்பொருள் பிடிக்கவில்லை என்றால் மற்றொரு பாருக்கு சென்று பிடித்ததை வாங்கி சாப்பிடலாமே? அப்படியும் விரும்பவில்லை என்றால் மனுதாரர் வீட்டிலேயே மது அருந்திவிட்டு உணவுப்பொருட்களை தயாரித்து சாப்பிடலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.