திருவனந்தபுரம் : கேரள வங்கியில் அடகு வைத்த 496 சவரன் நகைகளை திருப்பூர் வங்கியில் 17 பேர் பெயரில் அடகு வைத்து மோசடி செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் கார்த்திக் மேலாளராக உள்ள வங்கியில் சில தினங்களுக்கு முன்பு இந்த ஆண்டுக்கான தணிக்கை நடைபெற்றது.