ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90ஆயிரம் திருடப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மனோஜ்குமார். இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 4ம் தேதி திடீரென ரூ.20ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 20ம் தேதி ரூ.70ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. யூபிஐ மூலமாக ரூ.90ஆயிரம் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எம்எல்ஏ மனோஜ்குமார் ஜோதிநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சைபர் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.