டாக்கா: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக வங்கதேசத்தில் சமீபத்திய எதிர்ப்புகள் மற்றும் அமைதியின்மை என்ற தலைப்பில் 10 பக்கம் கொண்ட முதல் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று முன்தினம் ஜெனீவாவில் வெளியிட்டது. இதில், வங்கதேசத்தில் ஜூலை மாதம் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலான கால கட்டத்தில் சுமார் 400பேர் பலியாகி உள்ளனர். ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிக்கு இடையில் புதிய எதிர்ப்பு அலைகள் உருவானதை அடுத்து 250 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடந்த தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு காவல்கள் பற்றிய அறிக்கைகள் மீது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தி உள்ளது.