கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. காலே நகரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், கடந்த 25ம் தேதி, கொழும்பு நகரில் 2வது டெஸ்ட் துவங்கியது. முதலில் ஆடிய வங்கதேச அணி, 247 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 458 ரன் குவித்தது.
அதையடுத்து, 211 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேச அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி, 4வது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், இலங்கை 78 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றி உள்ளது. இப்போட்டியில் 158 ரன் குவித்த இலங்கை வீரர் பதும் நிஸங்கா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.