டாக்கா : வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால், 778 பேர் உயிரிழந்ததாகவும் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நோய்த் தொற்று அதிகரித்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.