டெல்லி : வங்கதேச விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.