டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசானது திருத்தப்பட்ட புதிய சேவை சட்டத்தை அறிவித்தது. இந்த சட்டத்தின் கீழ் தவறான நடத்தைக்காக அரசு அதிகாரிகளை எளிதில் பணி நீக்கம் செய்ய முடியும். இந்த புதிய சட்டத்துக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் அரசு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக நேற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. நேற்று முன்தினமே தலைமை செயலகம் முன் அரசு ஊழியர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து துணை ராணுவப் படை குவிக்கப்பட்டது.