டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்களின் பெரும் போராட்டங்களால் வன்முறை ஏற்பட்டது. மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள முக்கிய 5 நகரங்களில் இந்திய விசா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு குறிப்பிட்ட வகையிலான சேகைளுக்கு மட்டும் விசா வழங்கப்படும் என்று இந்திய விசா மையம் அறிவித்துள்ளது. டாக்கா,சட்டோகிராம்,ராஜ்சாகி,சில்ஹெட்,குல்னா ஆகிய இடங்களில் இந்த மையங்கள் செயல்படும் என்றும் அவசர மருத்துவ தேவைகள் மற்றும் இந்தியாவில் கல்வி பயில செல்பவர்கள் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டும் விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.