டாக்கா: வங்கதேசத்தில் இன்று பிற்பகல் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கிஷோர்கஞ்ச் பகுதியில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 ரயில் பெட்டிகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஏடுபட்டுள்ளனர்.
உள்ளூர் போலீஸ் அதிகாரி கூறியதாவது: காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இன்னும் சிலர் ரயிலின் அடியிலும் பெட்டியிலும் சிக்கிக் கொண்டுள்ளனர். சேதமடைந்த ரயில் பெட்டிகளை அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தை அடுத்து, டாக்கா-சிட்டகாங் மற்றும் சில்ஹெட்-கிஷோர்கஞ்ச் ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், சிக்னல் கிடைத்தும், சரக்கு ரயிலின் டிரைவர் ரயிலை வேறு பாதையில் மாற்றவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் மறுபுறம் வந்த பயணிகள் ரயிலின் ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.