டாக்கா: வங்கதேசத்தில் பிரதமராக இருந்தஷேக்ஹசீனா ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு பிரபல பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில்,ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் சார்பில் டாக்காவில் இன்று பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்றுள்ள முகமது யூனுசின் பத்திரிகை செயலாளர் ஷபீகுல் ஆலம் சமூகவலைதளத்தில் பதிவிடுகையில்,’அவாமி லீக் அதன் தற்போதைய வடிவத்தில் ஒரு பாசிசக் கட்சி. பாசிச கட்சியை வங்கதேசத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. இதை மீறினால் சட்ட அமலாக்க அமைப்புகளின் முழு பலத்தையும் எதிர்கொள்ள நேரிடும்’ என குறிப்பிட்டுள்ளார்.