சென்னை: வங்கதேச கலவரத்தில் இந்துக்கள் கொல்லப்படுவது தொடர்பான போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி இந்து முன்னணி சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுத்தாக்கல் நடைமுறை முடிந்து பட்டியலிடும் பட்சத்தில் விசாரிக்கப்படும். மேலும், வங்கதேச விவகாரத்தை ஒன்றிய அரசு கவனித்து வருகிறது, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.