சென்னை: ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி, பா.வேல்துரைக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.