பெங்களூரு: பெங்களூருவில் நடத்தப்பட்டுவரும் சோதனை குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், முக்கியமாக 2 ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய மற்ற சிலரது வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை 25 இடங்களிலும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 20 இடங்கள் என மொத்தம் 45 இடங்களிலும் சோதனை செய்யப்பட்ட நிலையில், அதன்பின்னர் சனிக்கிழமை கூடுதலாக 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அவரது கணவரும் ஒப்பந்ததாரருமான அம்பிகாபதி வீட்டில் ரூ.42 கோடி மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்தோம்.
வருமான வரி சோதனையின் 3ம் நாளான சனிக்கிழமையன்று, ஆர்க்கிடெக்ட் மற்றும் ஜிம் உரிமையாளர் ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்தோம். எனவே மொத்தமாக ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் வருமான வரி சோதனை தொடர்ந்து வருகிறது என்றார்.