டெல்லி : வங்கதேச விவகாரம் குறித்து பிற்பகல் 3.30 மணிக்கு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.