புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளது. புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 600 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.