தேவையானவை:
சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப் (வாழைப் பூவை நரம்பு நீக்கி,
ஒரு ஒரு இதழாக முழுமை யாக எடுத்துக் கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு.
கரைத்துக் கொள்ள:
கடலை மாவு – அரை கப்,
அரிசி மாவு – 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா ஒரு சிட்டிகை,
இட்லி மாவு – 3 டீஸ்பூன்,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
கரைத்துக் கொள்ளக் கொடுத்த வற்றை நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வும். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு வாழைப்பூவாக மாவில் முக்கி எடுத்து, பொரித் தெடுக்கவும்.