நெல்லை: நாங்குநேரி அருகே உள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், குளிக்கவும் அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.