புதுடெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி பறிக்கப்பட்ட பின் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் இந்தியா, வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேச அரசு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் ஆயத்த ஆடைகள் மற்றும் பிற ஏற்றுமதி பொருட்கள் இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியை கடந்த மாதம் இந்தியா ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 வாரங்கள் ஆன நிலையில் தற்போது வங்கதேச நுகர்வோர் பொருட்கள் வடகிழக்கு மாநில சாலை மார்க்கமாக இந்தியாவில் நுழைய நேற்று தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் மேற்கு வங்கத்தின் சங்கிரபந்தா, புல்பாரி போன்ற பகுதிகளின் சோதனைச் சாவடிகள் வழியாக இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.