கராச்சி: பலுசிஸ்தானின் கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஜப்பார் சந்தை அருகே நேற்று முன்தினம் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகில் இருந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து அங்கிருந்த பல கடைகள் இடிந்து விழுந்தன. மேலும் பல கடைகளில் தீப்பற்றியது. குண்டு வெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு 4 பேர் பலி
0