சென்னை: நாளை (ஜூன்17) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்” – எடப்பாடி பழனிசாமி
“ஒற்றுமையே உயர்வு தரும் என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒற்றுமை உணர்வு மேலோங்கிட வேண்டும்; வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத்
தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை
மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” – ஓ.பன்னீர்செல்வம்
“பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி