தேவையானவை:
கம்பு மாவு – 1 கப்
தயிர் – கால் கப்
ஓமம் – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – சுடுவதற்கு
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வாயகன்ற பாத்திரத்தில் கம்பு மாவுடன், உப்பு, ஓமம், நெய், தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். (தோசைக்கல்) தவாவில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்தமாவை சப்பாத்திகளாக திரட்டி, சிறிது எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சூடாக பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.