பஜாஜ் நிறுவனம், சேத்தக் 3201 என்ற ஸ்பெஷல் எடிஷன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புரூக்லின் பிளாக் வண்ணத்தில் உள்ள இந்த ஸ்கூட்டரின் பக்கவாட்டில், சேத்தக் ஸ்டிக்கர்கள், டூயல் டோன் சீட், டிஎப்டி டிஸ்பிளே ஆகியவை இடம் பெற்றுள்ளன. 3.2 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. பிரீமியம் வேரியண்ட் ஸ்பெஷல் எடிஷனாக இது சந்தைப்படுத்தப்பட்டிருந்தாலும், அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 73 கி.மீ வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்தால் 136 கி.மீ தூரம் வரை செல்லலாம். வண்ண டிஸ்பிளே, நேவிகேஷன் வசதி தேவைப்படுவோர் டெக்பேக் பேக்கேஜை கூடுதல் தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பஜாஜ் சேத்தக் 3201
previous post