பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய, மேம்படுத்தப்பட்ட ஆர்எஸ் 200 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதன் முதலாக இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் 200 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ள.
இது அதிகபட்சமாக 24 எச்பி பவரையும், 18.74 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. மேலும், புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய எல்சிடி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. மொபைல் போனை இதனுடன் இணைத்து, நேவிகேஷன், போன் அழைப்பு, எஸ்எம்எஸ் விவரங்களை அறிந்து கொள்ளலாம். ரெயின் , ரோடு, ஆஃப் ரோடு என்ற மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.84 லட்சம்.