பஜாஜ் ஆட்டோ லிமிடெட், பயணிகள் வாகன பிரிவில் பஜாஜ் கோ கோ என்ற புதிய மூன்று சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பி5009, பி5012, மற்றும் பி7012 என்ற மூன்று வேரியண்ட்கள் உள்ளன. இதில் பி என்பது பயணிகள் வாகனத்தை குறிக்கிறது, அதற்கு அடுத்துள்ள 50 மற்றும் 70 ஆகிய எண்கள் அதன் அளவையும், 09 மற்றும் 12 ஆகிய எண்கள் 9 கிலோவாட் அவர் மற்றும் 12 கிலோவாட் அவர் பேட்டரியை குறிப்பதாகவும் உள்ளன.
இந்த தொழில்துறை பிரிவிலேயே முதலாவதாக தானியங்கி டிரான்ஸ்மிஷன்கள் இதில் பொருத்தப்பட்டள்ளது. ஆட்டோ ஹசார்ட், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் அடசிஸ்ட், எல்இடி விளக்குகள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை ரூ.3,26,797. டாப் வேரியண்ட் சுமார் ரூ.3,83,004. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டதாக, நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.