பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் ஃப்ரீடம் 125 என்ற சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இது இயங்கும். அறிமுகத்தின் போது இந்த பைக் முதலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் எனவும் பின்னர் ஒரு சில மாதங்களில் நாடு முழுவதும் சந்தை படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்த பைக்கில் மூன்று வேரியன்ட்கள் உள்ளன துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.95, 000 எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.1.1 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அறிமுகம் செய்து முதல் வாரத்திலேயே புனையில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு முதலாவது பைக் டெலிவரி செய்யப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் ஃப்ரீடம் 125
123