பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அவஞ்சர் ஸ்டிரீட் 220 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. துவக்க நிலை குரூசர் மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் தனது இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள இந்த முடிவை பஜாஜ் நிறுவனம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இந்த மோட்டார் சைக்கிள் உற்பத்திக்காக பதிவு செய்துள்ளது.
இதன்படி அவெஞ்சர் 220 குரூஸ் மற்றும் அவெஞ்சர் 220 ஸ்டிரீட் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. அவெஞ்சர் ஸ்டிரீட் எடை சுமார் 310 கிலோ. இதில் 220 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 18 எச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 17 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.