பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம், டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் ஆகிய மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 50,000 என்ற மைல் கல்லை தாண்டியதை கொண்டாடும் வகையில், இவற்றின் ஷோரூம் விலையில் ரூ.10,000 தள்ளுபடியை அறிவித்திருந்தது. தற்போது இந்தச் சலுகையை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்துடன் டிரையம்ப் கைகோர்த்து ஓராண்டு நிறைவையொட்டி இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 100க்கும் அதிகமான டிரையம்ப் ஷோரூம்களில் இந்தச் சலுகையைப் பெறலாம். இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 398.15 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 39.5 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 37.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. ஷோரூம் விலையாக ஸ்பீடு 400 சுமார் ரூ.2.34 லட்சம் எனவும், ஸ்கிராம்ப்ளர் 400 சுமார் ரூ.2.54 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.