இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தனது பதவிக்காலத்தில் கிடைத்த பரிசு பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 2வது தோஷாகானா வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைத்த ஒரு சில மணி நேரத்துக்கு பின் இம்ரானை ராவல்பிண்டி போலீசார் கைது செய்தனர். அவர் மீது தீவிரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நியூடவுன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அவரை கைது செய்தனர்.