டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும் ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மனுதாரர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருவதை கருதி நீதிபதிகள் ஜாமின் வழங்கியுள்ளனர்.