சென்னை: தங்கள் கட்சிக் கொடிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. த.வெ.க. கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடரப்படத்து. பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கம், வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் மனுவை உச்சபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மனுவை தள்ளுபடி செய்க: த.வெ.க.
0