சென்னை: சென்னையில் மோசமான வானிலை காரணமாக, சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும், 10 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் இருந்து நேற்று மாலை 3.45 மணிக்கு சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில் 127 பேர் பயணிக்க இருந்தனர். அப்போது விமானம் மாலை 4.30 மணிக்கு தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் காத்திருந்தனர். தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு, விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மோசமான வானிலை நிலவுவதால் விமானம் இன்று சீரடி செல்லாது என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே, இதே டிக்கெட்டில் நாளை (இன்று) பயணிகள் செல்லலாம். இல்லையேல் இன்று (நேற்று) துர்காபூர் செல்லும் விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக சீரடி செல்லலாம் என்று கூறி, பயணிகளை சமாதானம் செய்தனர். இதேபோல் நேற்று சென்னை விமான நிலையத்தில் அந்தமான், பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 4 மணி நேரமும், மதுரை, மும்பை செல்ல வேண்டிய விமானங்கள் ஒரு மணி ம் நேரமும்என 10 விமானங்கள் இயக்கப்பட்டன.