சென்னை: சூறைக்காற்று மோசமான வானிலை காரணமாக அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பியது. சென்னையில் இருந்துஅந்தமான் செல்லும், 12 மணிக்கான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 154 பயணிகள் 6 விமான ஊழியர்களுடன், அந்தமான் புறப்பட்டு சென்றது. அப்போது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன், கனமழை இடி, மின்னலும் ஏற்பட்டது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியவில்லை. இது குறித்து அறிந்ததும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டுஅறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவிட்டனர். அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்தது. நேற்று மாலை 5:10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. மீண்டும் விமானம் இன்று காலை, சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும். பயணிகள் அனைவரும் இதே விமான டிக்கெட்டில் நாளை அந்தமான் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.