மும்பை: மராட்டிய மாநிலம் பட்லாபூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தை கண்டித்து ஆவேசமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பட்லாபூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.