சென்னை: பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜக உள்ளதால் சாதி வாரி கணக்கெடுப்பை முடக்கப்பார்க்கிறது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி வலியுறுத்தும் சாதி வாரி கணக்கெடுப்பு மட்டுமே சமூக நீதி பெற ஒரே முடிவு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பின்தங்கிய சமுதாயத்தினருக்கு 27% ஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது எனவும் அவர் கூறினார்.