திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை கடுமையாக சரிந்ததால் சாகுபடி செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டும் அவலம் நிலவுகிறது. தக்காளி கென அய்யலூரில் தனி ஏலச்சந்தை உள்ளது. நாள்தோறும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் தக்காளி கொண்டுவரப்படுகிறது. ஆனால் சாகுர் ரக தக்காளி கிலோ ரூ.10க்கும், நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.4க்கும் விற்பனையாகிறது.
இதனால் சில விவசாயிகள் அறுவடை செய்யாமல் செடியிலேயே தக்காளிகளை விட்டுவிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதே போன்று பழனி அருகே கணக்கன்பட்டி, நெய்க்காரபட்டி, தொப்பம்பட்டி கிராமங்களிலும் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் மிக அதிகமாக உள்ளது இதனால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 30 முதல் ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறும் தக்காளி விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.