புதுடெல்லி: அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ஒன்றிய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணைஅமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “ ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயுர்வேதத்தை கொண்டு வருவதற்கான பிரதமரின் லட்சிய முயற்சியை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். யோகா, ஆயுர்வேதம் குறித்த உலகின் பார்வை மாறி உள்ளது. மேலும் மக்கள் அதை ஏற்று கொள்வதும் வேகமாக அதிகரித்துள்ளது. பாரம்பரிய மருத்துவ முறையை விரிவுப்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயுஷ் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்” என்று கூறினார்.