கவுன்சில் பிளப்ஸ்: யுஎஸ் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடா வீரர் பிரையன் யாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் கவுன்சில் பிளப்ஸ் நகரில் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆயுஷ் ஷெட்டி (20), கனடா வீரர் பிரையன் யாங் (23) உடன் மோதினார். இப்போட்டியில் முதல் செட்டை சற்று சிரமப்பட்டு கைப்பற்றிய ஆயுஷ், 2வது செட்டை எளிதில் வசப்படுத்தினார். 21-18, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி சர்மா (16), சீனாவில் பிறந்து அமெரிக்காவுக்காக ஆடிவரும் பெய்வென் ஜாங் (34) உடன் மோதினார். இப்போட்டியில் அனுபவ வீராங்கனை ஜாங், முதல் செட்டிலும், துள்ளலுடன் ஆடிய தான்வி 2வது செட்டிலும் வென்றனர். கடைசியில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை ஜாங் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 21-11, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜாங் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
யுஎஸ் ஓபன் பேட்மின்டன்: மகுடம் சூடிய ஆயுஷ்; இறுதியில் வீழ்ந்த கனடா வீரர்
0