புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் வரும் 23ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் புதுக்கோட்டையில் பொரி உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாட்களில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் செய்யப்படும் வழிபாடுகளில் முதன்மை பொருளாக பொரி பயன்படுத்தபடுகிறது.
இந்த ஆண்டு ஆயுதபூஜை வரும் 23ம் தேதி கொண்டாடபடவுள்ள நிலையில் புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அருகமை மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் தேவையை பொறுத்து போரிமூட்டைகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.