சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் அயற்பணியில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் அளிக்கப்படுவதில்லை. அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே திரும்ப எடுத்துக் கொள்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றவில்லை. எனவே, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரிகளில் அயற்பணியில் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே பணியமர்த்தி, அவர்களுடைய மனஉளைச்சலைத் தடுத்து நிறுத்தவும், அவர்கள் பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்ய வேண்டுமென்று முதலமைச்சரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.