திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண், அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்துள்ளார். எலவம்பட்டியைச் சேர்ந்த ஹேமலதா வயிற்றி வலி காரணமாக கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையம் வந்துள்ளார். ஹேமலதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து விடுமாறு கூறினர். மருத்துவர்களின் பரிந்துரையை கேட்காமல், வீட்டுக்குக் சென்ற ஹேமலதாவுக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.