தேனி: தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில், தேனி மாவட்டம் முழுவதும் இந்து எழுச்சி முன்னணி சார்பாக நடத்தக்கூடிய விநாயகர் ஊர்வலத்தை மாவட்ட காவல்துறையின் வழிகாட்டுதலோடு அமைதியான முறையில் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன