புதுடெல்லி: நாடு முழுவதும் பள்ளி முதல்வர்களுக்கு சிபிஎஸ்இ அனுப்பி உள்ள கடிதத்தில், ‘டைப் 2 நீரிழிவு நோயானது கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்களிடையே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளதே இந்த ஆபத்தான போக்குக்கு முக்கிய காரணம்.
எனவே அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் அது குறித்த தகவல் அடங்கிய ‘சர்க்கரை விழிப்புணர்வு பலகைகளை’ பள்ளிகளில் நிறுவ வேண்டும். இந்த பலகைகள் பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை உட்கொள்ளும் அளவு, பொதுவாக உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சர்க்கரையின் அளவு, அதிக சர்க்கரை எடுப்பதால் ஏற்படும் அபாயங்கள், ஆரோக்கியமான உணவுகள் குறித்த அத்தியாவசிய தகவல்களை வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.