நெல்லை : நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பாளையில் நடந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் எஸ்டிசி கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஜேசிஐ, நெல்லை கிளாசிக், எக் பவுண்டேசன் மற்றும் சாராள் தக்கர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்தது.
கல்லூரி முன்பாக நேற்று நடந்த இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஜேசிஐ தலைவர் டாக்டர் நெல்லை குமரன், சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் பெல்ஷியா கிளாடிஸ் சத்தியதேவி, எக் பவுண்டேசன் நிறுவனர் நிவேக், மண்டல அலுவலர் ரபேல் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாந்தி, சபிக், கவுதம், மாரிமுத்து மற்றும் கல்லூரி மாணவிகள் என திரளானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.